தமி­ழீ­ழத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வாக்­கு­று­தி­களை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் வழங்­கி­யுள்­ளார்

இலங்­கை­யைப் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கூறு போட் ­டே­னும் தமி­ழீ­ழத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வாக்­கு­று­தி­களை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் ­புக்கு வழங்­கி­யுள்­ளார் என்று சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

கொழும்பு, பத்­த­ர­முல்­லை­யில் அமைந்­துள்ள சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணிக் கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில்  நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிர­சன்ன ரண­துங்க மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­தா­வது,

2009 ஆம் ஆண்டு தோற்­க­டிக்­கப்­பட்ட தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீள தங்­களை பலப்­ப­டுத்­தி­கொண்டு மீண்டு வரு­வார்­கள். இவர்­கள் வடக்கு, கிழக்­கில் உள்ள இரா­ணு­வத்­தி­னரை விரட்­டி­ய­டிப்­பார்­கள் என்று நாம் கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்­பா­கவே கூறி­யி­ருந்­தோம்.

அதற்­கான ஏற்­ப­டு­கள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. நாட்­டைப் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கூறு­போட்­டே­னும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு தமி­ழீ­ழத்தை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கப்­ப­டு­மென்ற வாக்­கு­று­தியை ரணில் விக்­கி­ர­ம­சிங்க வழங்­கி­யுள்­ளார்.

சட்­ட­வாக்­கம் மற்­றும் நிறை­வேற்­றுத்­து­றை­யில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­க­ளைத் தீர்த்து வைக்க நீதித்­துறை தலை­யீடு மேற்­கொண்­டுள்­ளது. இதே­வேளை, அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மிரட்­டல் விடுக்­கப்­ப­டு­வ­தால், அவர்­கள் அச்­சத்­தில் இருக்­கி­றார்­கள். பொதுத்­தேர்­தலை நடத்தி மக்­க­ளின் இறை­மை­யின் அடிப்­ப­டை­யில் புதிய அர­சு­சொன்றை அமைப்­பதே இதற்­கெல்­லாம் ஒரே தீர்வு – என்­றார்.

Sharing is caring!