தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­புக்­குள் பிளவை ஏற்­ப­டுத்தி கரு­ணா­வைப் பிரித்­தெ­டுத்­த­மைக்­கும் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கோ, ரணிலிற்கோ தொடர்பு இல்லை

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­புக்­குள் பிளவை ஏற்­ப­டுத்தி கரு­ணா­வைப் பிரித்­தெ­டுத்­த­மைக்­கும், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கோ, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வுக்கோ ­இடை­யில் எந்­தத் தொடர் ­பும் இல்லை. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யை­யும், ரணில் விக்­கி­ர­ம­சிங்க­வை­யும் இந்த விட­யத்­தில் தொடர்­பு­ப­டுத்­திக் கதைப்­பது வதந்­தி­யா­கும்.

இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­தித் தலை­வ­ரும் அம்­பாந்­தோட்டை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­தார்.

அலரி மாளி­கை­யில் சஜித் பிரே­ம­தாஸ சந்­தித்த வெளி­நாட்டு ஊட­கம் ஒன்­றின் இலங்­கைச் செய்­தி­யா­ள­ருக்கு வழங்­கிய சிறப்பு நேர்­கா­ண­லி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.அவர் தெரி­வித்­த­தா­வது,

2004ஆம் ஆண்டு விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் அதன் பிர­தித் தலை­வ­ராக இருந்த கருணா அம்­மா­னுக்­கும் இடை­யில் ஏற்­பட்ட முரண்­பா­டு­கள் – பிள­வு­க­ளு­டன் அப்­போ­தைய தலைமை அமைச்­ச­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைத் தொடர்­ப­டுத்தி உள்­நாட்­டி­லும் வெளி­நாட்­டி­லும் வெளி­வந்த கதை வெறும் வதந்­தி­யா­கும்.

கருணா அம்­மானை ஐ.தே.க. காப்­பாற்றி வைத்­தி­ருக்­க­வில்லை. அவ­ருக்­குப் பாது­காப்பு, பிரதி அமைச்­சுப் பதவி, சுக­போக வாழ்க்கை ஆகி­ய­வற்றை மகிந்த ராஜ­பக்ச அரசே வழங்­கி­யி­ருந்­தது. இது அனை­வ­ருக்­கும் தெரிந்த விட­ய­மா­கும்.

மகிந்த ராஜ­பக்­ச­வின் கொடுங்­கோல் ஆட்­சி­யில் கருணா அம்­மா­னின் அட்­டூ­ழி­யம் கிழக்­கில் தலை­வி­ரித்­தா­டி­யது. இதற்கு மகிந்த அரசு முழு ஆத­ர­வை­யும் வழங்­கி­யி­ருந்­தது.

இப்­ப­டிப்­பட்ட மகிந்த ராஜ­பக்ச தரப்­பு­டன்­தான் தமிழ் மக்­க­ளின் பெரும்­பா­லான வாக்­கு­க­ளி­னால் அரச தலை­வ­ரா­கத் தெரி­வான மைத்­தி­ரி­பால சிறி­சேன இணைந்­துள்­ளார்.

கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­க­ளின் அமோக வாக்­கு­கள் மைத்­தி­ரி­பா­ல­வுக்­குக் கிடைத்­தன. அதை அவர் உணர்ந்­தும் உண­ரா­மல் தான்­தோன்­றித்­த­ன­மா­கச் செயற்­ப­டு­கின்­றார்.

2004ஆம் ஆண்டு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆட்­சி­யில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் அமைப்­பி­லி­ருந்து கருணா அம்­மான் வில­கி­னார்.

இந்த விவ­கா­ரத்­தை­ய­டுத்து வெளி­வந்த கட்­டுக்­க­தை­யால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது தமிழ் மக்­கள் சிலர் அதி­ருப்­தி­யில் இருக்­க­லாம். ஏன் ரணிலை எதி­ரி­யா­கக்­கூட அவர்­கள் பார்க்­க­லாம். ஆனால், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­கள் மனங்­க­ளில் மறக்க முடி­யாத பச்­சைத் துரோகி ஆவார்.

1993ஆம் ஆண்டு மே தினத்­தன்று கொழும்பு நக­ரில் விடு­த­லைப்­பு­லி­கள் நடத்­திய தற்­கொ­லைத் தாக்­கு­த­லில் அப்­போ­தைய அரச தலை­வ­ராக இருந்த எனது தந்தை ரண­சிங்க பிரே­ம­தாச உயி­ரி­ழந்­தார். அதற்­காக விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பை ஆத­ரித்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களை நான் வெறுக்­க­வில்லை. போரால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட அவர்­களை எனது சகோ­த­ரர்­க­ளா­கவே நான் பார்க்­கின்­றேன்.

ஐக்­கிய தேசி­யக் கட்சி மீண்­டும் ஆட்­சிப்­பீ­டம் ஏறி­ய­தும் தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்வை வழங்­கியே தீரும். அந்­தத் தீர்வு இலங்­கை­யி­லுள்ள சகல இனத்­த­வர்­க­ளும் ஏற்­கும் தீர்­வாக இருக்­கும் – என்­றார்.

இதே கருத்தை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Sharing is caring!