தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தொடர்ந்தும் தாம் செயற்படப்போவதில்லை

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தொடர்ந்தும் தாம் செயற்படப்போவதில்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ்வரன் கட்சியிலிருந்து விலகிய விடயத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு உறுதிப்படுத்தினார்.

கடிதமொன்றினூடாக சி.வி. விக்னேஷ்வரன் இந்த விடயத்தை அறிவித்ததாகவும் மாவை சேனாதிராஜா நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

Sharing is caring!