தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

எனினும், அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளிவராத நிலையில், எழிலனின் மனைவியும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்து அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் அவர் இன்றுகாலமானதாக  அரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை இடம்பெறுமென அனந்தி சசிதரன் அறிவித்துள்ளார்.

Sharing is caring!