தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நஷ்டஈடு வழங்க அனுமதிக்க முடியாது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில்(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழீழ விடுதலைப் புலிகள் எனப்படுபவர்கள் நாட்டில் பாரிய குற்றச்சாட்டுக்களின் ஈடுபட்ட ஒரு அமைப்பாகும். ஆயுதமேந்தி, நாட்டை பிளவுபடுத்த போராடிய ஒரு குழுவே அவர்கள்.

இப்படியானர்களுக்கு நஷ்ட வழங்குவதென்பது அரசியலமைப்புக்கும் முரணான ஒன்றாகும். இதனை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

ஆனால், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதை நாம் பிழை என்றுக் கூறமாட்டோம். கடமையில் இருக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கோ, ஏனைய விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கோ நஷ்டஈடு வழங்குவதில் தவறில்லை.

அதைவிடுத்து, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டு, நாட்டையே இரண்டாக்க வேண்டும் என்று துடுத்த சக்திகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இது சட்டத்துக்கு எதிரான ஒன்றாகும்“ என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!