தமிழ் அரசியல்வாதிகளுக்கு செருப்படி….?

நானும் ஜெனீவாவுக்கு போனேன் என செய்தியில் இடம்தேடுவதை காட்டிலும் அதே நோக்கத்துடன் மக்களை சந்தித்து உள்நாட்டில் மக்களை திரட்டி போராட்டம் நடாத் துவதற்கு ஆழுமை வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிலர் ஊடகங்களில் விளம்பரம் போட்டுவிட்டும், ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துவிட்டும் ஜெனீவாவுக்கு சென்றுள்ளனர். இன்னும் பலர் ஜெனீவாக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

அங்கு செல்பவர்களுடைய செயற்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக தலைமுடி அயன் செய்வதற்கும், நல்ல ஹோட்டல்களில் தங்கி உறவினர்களை சந்திப்பதற்கும், சொகுசாக இருப்பதற்கும்

பல அரசியல்வாதிகள் விழுந்தடித்து ஜெனீவா செல்கிறார்களே தவிர அவர்களால் வேறு ஒன்றும் ஆவதில்லை. என விமர்சனங்கள் எழுகின்றது. இந்நிலையில் அமைச்சர் மனோகணேசன் இன்று தனது முகப்புத்தகத்தில் எழுதியுள்ள குறிப்பில்,

“நானும் ஜெனிவா போனேன்னு செய்தியில் இடம் தேடறதைவிட, அதே நோக்கில் உள்நாட்டில் மக்களை திரட்டி போராட ஆளுமை வேண்டும்(சொந்த அனுபவம்)” என எழுதியுள்ளார். இது ஜெனீவாவுக்கு விழுந்தடித்து ஓடும் அரசியல்வாதிகள்

பலருக்கு செருப்படி.”

Sharing is caring!