தமிழ் துரோகி கருணா

கொழும்பு அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த தரப்பு பேரம் பேசி வருகிறது.

கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்து பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மஹிந்த அணி வாங்கி உள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த தமிழ் உறுப்பினரும் அடங்கும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைந்து அதன் உறுப்பினர்களை மஹிந்த அணியுடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) முன்னெடுத்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை மஹிந்த தரப்புடன் இணைந்து பிரதியமைச்சர் பதவியை பெற்றார்.வியாழேந்திரனை மஹிந்த தரப்புடன் இணைக்க தரகு பணியை கருணா செய்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 35 முதல் 50 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும் லண்டன் ஊடாக இந்த பணம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மஹிந்த தரப்பு உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கான தரகு பணம் வழங்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும் மீதி தொகை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் மஹிந்த தரப்புக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் தவணைகளாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!