தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி.க்களுக்கு அழைப்பு

கொழும்பு:
எதிராக ஓட்டு போட முடிவு செய்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது. இதனால் அக்கட்சி எம்.பி.க்களுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 7ந் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது, பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளது.

இந்நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக ஓட்டளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ராஜபக்சே தரப்பு சமரச முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விடுத்த நிபந்தனையை ஏற்று, தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, அக்கட்சியின் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சிறிசேனா, தன்னுடன் பேச்சு நடத்தவருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!