தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை இணைக்க நடவடிக்கை

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை இணைக்கவுள்ளதாக மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தெரணியகல மயாய கனிஷ்ட வித்தியாலய கட்டிட திறப்புவிழாவில் நேற்று (26) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற 900 தமிழ் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனவரி மாதம் மேலும் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் பிரச்சினை நிலவாது எனவும் ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Sharing is caring!