“தமிழ் மக்களது நன்மை கருதியே மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதவு வழங்க முடிவு”

பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றமை தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களது நன்மை கருதியே எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பிரதமராகப் பதவியேற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதவு வழங்குவதென முடிவெடுத்துள்ளது.

எமக்குக் கிடைக்கின்ற பதவிகள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு நாம் எமது பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.

அதன்மூலம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். இவ்வாறானதொரு சூழலில் நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எமது முழுமையான ஆதரவினை வழங்கத் தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!