தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளது

சந்தைக்கு வரும் மரக்கறிகள் அதிகரித்துள்ளமையால், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளது.

அதனால், நாளாந்தம் 50 தொன் மரக்கறி வீண்விரயமாகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (04) ஒரு கிலோகிராம் தக்காளி 10 முதல் 15 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

அதேநேரம், சந்தைக்கு வரும் மரக்கறிகள் அதிகரித்துள்ளமையால், மேலதிக மரக்கறிகள் யானைகளுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!