தயாராக இருந்த இலங்கை விமானத்தில் திடீரென தொழில் நுட்பக்கோளாறு

கொழும்பு வருவதற்கு தயாராக இருந்த இலங்கை விமானத்தில் திடீரென தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு குறித்த விமானம் புறப்படத் தயாரானது. திடீரென ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக 4 மணிநேரம் தாமதமாகியே விமானம் இலங்கை வந்துள்ளது.

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்பு விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டு 4 மணிநேரம் தாமதமாகி இரவு 7.03 மணிக்கு இலங்கை புறப்பட்டுச் சென்றது.

இதனால் இலங்கையில் இருந்து டுபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியவர்கள் தங்கள் விமானத்தை தவறவிடும் பரிதாப சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமான நிறுவனத்தினருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பயணத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக விமான நிறுவனத்தினர் கூறி பயணிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Sharing is caring!