தரமான விதை…நிறைவான அறுவடை

தரமான விதை மற்றும் நடும் பொருள் பாவனை மூலம் அறுவடையை 15 தொடக்கம் 20 வீதம் வரை மேம்படுத்த முடியும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் வகுக்கப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தரமான விதை உற்பத்தியில் தேவையான உபகரணங்கள் மற்றும் சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய தாவரவகை வளர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி நடும் பொருட்களை பிரபல்யப்படுத்தல், சந்தையில் விற்பனைக்குள்ள விதை மற்றும் பொருட்களின் தரத்தன்மையை உறுதிசெய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!