தரம் 1 இற்கான புள்ளிகளில் முறைப்பாடுகள்

அடுத்த வருடத்தில் தரம் ஒன்றில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் ஆவணங்களில் பதிவுசெய்யும்போது மாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள பாடசாலைகளில் நேர்முகப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் புள்ளிகளிலேயே இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எந்தவொரு மாணவரின் புள்ளிகளிலும் மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுமாயின், தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோரிடம் கல்வியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Sharing is caring!