தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளியும் வௌியாகியுள்ளது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளியும் வௌியாகியுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு , கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை காலி, மாத்தறை,கேகாலை ஆகிய மாவட்டங்களில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 165 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு 164 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பதுளை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 163 ஆகும்.

மன்னார், திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, இரத்தினபுரி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் வெட்டுப்புள்ளியாக 162 புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது குறித்து அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம், 1911 அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், 0112 784 208, 0112 784 537, 0113 188 350, மற்றும் 0113 140 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

Sharing is caring!