தாதியர்கள் இன்று எதிர்ப்புப் பேரணி

தாதியர் சேவையில் காணப்படுகின்ற 6 பிரச்சினைகளுக்குத் தீர்வு கேட்டு இன்று எதிர்ப்புப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது.

இன்று நண்பகல் 12 மணியளவில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து சுகாதார அமைச்சு வரை இந்தப் பேரணி செல்லும் என்று அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எஸ்.ஜீ மெதிவத்த கூறினார்.

அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!