தாதியொருவரின் தங்க நகையை அறுத்துக் கொண்டு ஓடியவர் நீரில் மூழ்கி பலி!

தாதியொருவரின் தங்க நகையை அறுத்தவர், பொதுமக்களிடமிருந்து தப்ப ஆற்றில் குதித்து தப்ப முயன்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொட, மீட்டிகொட பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.

பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவர், மலாவென்ன ரயில்கே கடவையருகே பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

அவரது கூச்சலையடுத்து அங்கு குவி்த பொதுமக்கள், திருடனை விரட்டி சென்ற போது, ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றார்.

அவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்தவர், அண்மையில் விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!