தாமதத்திற்கு அரசாங்கஆம காரணம்

சில விடயங்களுக்கு அமைச்சுக்களே வகை கூற வேண்டும் எனவும், ஜனாதிபதியோ ஜனாதிபதி செயலகமோ அல்லவெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையை நியமித்து மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அந்த அமைச்சுக்களின் கீழ் காணப்படும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர்கள், பணிப்பாளர் சபை நியமிக்கப்படாதது குறித்து சில தரப்பினர் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி விரல் நீட்டுவதாகவும், அது முற்றிலும் தவறான கருத்து எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமைக்கு குறித்த அமைச்சுக்களே வகைகூற வேண்டும் என்பதுடன், குறித்த பரிந்துரைகள் பிரதமரின் அலுவலகத்தினால் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படாமையே இந்த தாமதத்திற்கு காரணமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறானபோதும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர்கள், பணிப்பாளர்கள் சபையை நியமிக்கின்றபோது அதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினூடாகவே அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊவா மற்றும் மத்திய மாகாண அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (13)  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!