திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கயான் கைது

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கல்தேமுல்ல கயான் என்பவர், இரத்மலானையில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 5 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அங்குலான ரோஹா எனப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரின் உதவியாளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!