திண்மப் பொருட்களுக்கும் சீனியின் அளவு குறிப்பிடவேண்டும்

இலங்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மென் பானங்களில் சீனியின் அளவை வௌிப்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட வர்ணக் குறியீட்டு முறை நேற்று (01) முதல் திண்ம உணவுப் பொருட்களுக்கும் விஸ்தரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சீனி, உப்பு, எண்ணெய் செறிந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதன் மூலம் மக்கள் தொற்றா நோய்களுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சு, அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மென்பான போத்தல்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை 2017ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் உணவுச் சட்டத்திற்கு அமைய, இந்த வர்ணக் குறியீட்டு முறை திண்ம உணவுப் பொருட்களுக்கும் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!