திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டம்

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தௌிவுபடுத்தினார்.

இந்தியன் ஒயில் நிறுவனம் தற்போது 15 தாங்கிகளைப் பயன்படுத்துகின்றது. மற்றைய தாங்கிகள் 17 அல்லது 18 வருடங்களாக உக்கிய நிலையில் காணப்படுகின்றன. இந்த காணியின் உரிமத்தை அரசாங்கம் வைத்துக்கொண்டு உடன்படிக்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அத்துடன், தற்போது இந்தியன் ஒயில் நிறுவனம் பயன்படுத்தும் 15 தாங்கிகளையும் அவர்களுக்கு வழங்குவது இரண்டாம் விடயமாகும். இந்தியன் ஒயில் நிறுவனமும் பெட்ரோலிய கூடடுத்தாபனமும் இணைந்து மற்றைய 85 தாங்கிகளையும் அபிவிருத்தி செயவது மூன்றாவது விடயாகும்.

நாம் பயன்படுத்தும் 16 தாங்கிகள் மூலம் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப எதிர்பார்கின்றோம். அத்துடன் வடக்கு, கிழக்கு பகுதியில் எண்ணெய் விநியோகிக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும். அமைச்சரவையில் தீர்மானிக்கும் காலத்தில் இது வழங்கப்படும். நான் தீர்மானிக்கும் தினத்தில் அல்ல.

என அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார்.

Sharing is caring!