திருகோணமலை கடற்கரை பகுதியில் பெண் விரிவுரையாளர் ஒருவரின் சடலம்

திருகோணமலை கடற்கரை பகுதியில் பெண் விரிவுரையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய இன்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் வவுனியா – ஆசிக்குளம், கற்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி என்ற பெண் விரிவுரையாளரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த பெண் கர்ப்பிணி என்பதுடன் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Sharing is caring!