திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் பெண்ணொருவரின் சடலம்

திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எனினும், சடலம் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் சீனன்குடா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கற்பிட்டி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

40 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணின் சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!