திருக்கேதீஸ்வரத்தில் பதட்டம்…மதங்களிடையே முறுகல்…பாதிரியார் தலைமையில் வெறியாட்டம்!

மன்னார்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த நுழை வாயில் வளைவு கிறிஸ்த்தவ மக்களால் பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் மன்னார் மாந்தை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிலில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்த நுழைவாயில் வளைவினை புனரமைப்பதற்காக ஆலய நிர்வாகம் முயற்சித்திருந்த நிலையில் அங்குவந்த கிறிஸ்த்தவ மதத்தவர்கள் சிலர் அதனை எதிர்த்திருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் மதபோதகர்கள் முன்னிலையில் குறித்த நுழைவாயில் வளைவு பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாகவே ஆலய நிர்வாகம், இந்து சமய அமைப்புக்கள் மன்னார் மறைமாவட்ட ஆயரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருக்கின்றனர்.

Sharing is caring!