திருக்கேதீஸ்வரம் விவகாரம்….மதவெறியர்களை கைது செய்ய நடவடிக்கை

மன்னார்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சிவராத்திரி வளைவை உடைத்தவா்களை உடனடியாக கைது செய்யுமாறு மன்னார் மாவட்ட நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். கடந்த சிவராத்திரி திருவிழாவிற்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அலங்கார வளைவு கத்தோலிக்க மக்களால் உடைத்து அகற்றப்பட்டது உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

Sharing is caring!