திருப்பதி கோவில் வழிபாட்டில் மகிந்த….

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை திருப்பதி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் பெங்களூரிலிருந்து நேற்று (11) மாலை விசேட விமானத்தினூடாக திருப்பதியை சென்றடைந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இன்று அதிகாலை சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் விசேட பூஜைகளில் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் திருப்பதி விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக
இராமேஸ்வரம் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Sharing is caring!