திரு ஆரூரன் அருனந்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்திப்பு

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரியில் சாதனை படைத்த திரு ஆரூரன் அருனந்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது 40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்தமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழை ஜனாதிபதி பார்வையிட்டதோடு ஆருரன் அருனநதியையும் பாராட்டினார்.

Sharing is caring!