தீப்பரம்பலில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஹற்றன்- டிக்கோயா, போடைஸ் பகுதியிலுள்ள தொடர் குடியிருப்பொன்றில் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட தீப்பரம்பலில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தீயினை கட்டுப்பதற்கு சில தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் 24 வீடுகளுக்கு தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட 150 பேரையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!