தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டியால் பரபரப்பு

யாழ் ஏழாலையில் சற்று முன்னர், முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றியெரிந்து நாசமாகியுள்ளது. இதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.யாழ் ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் சென்றுகொன்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென்று தீப்பிடித்து முற்றாக நாசமாகியுள்ளது. எனினும் முச்சக்கர வண்டி தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.

வீதியில் சென்று கொண்டிருந்தவர்களும் அயலவர்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்ற போதும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!