துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

தங்காலை – வாடிகல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகளால் இந்தத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்போது ரிபீடர் வகையான துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள வாகனம் திருத்தும் இடத்தின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Sharing is caring!