துப்பாக்கி ரவைகளுடன் பெண் கைது

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடகல பகுதியில் துப்பாக்கி ரவைகள் மற்றும் வாளொன்றுடன் 27 வயதுடைய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போதே குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 130 ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகளையும் வாளொன்றினையும் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று கல்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை பிணையில் செல்ல அனுமதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!