தூக்குத் தண்டனை வழங்கும் தீர்மானத்துக்கு தான் எதிரானவன் மங்கள சமரவீர

குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் தீர்மானத்துக்கு தான் எதிரானவன் எனவும் தூக்குத் தண்டனை வழங்கி போதைப் பொருள் வர்த்தகத்தை நாட்டில் இல்லாதொழிக்க முடியாது எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் உலக நாடுகள் எந்தவொன்றிலும் குற்றச் செயல்கள் குறைந்ததாக தகவல்கள் இல்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மரண தண்டனையை செயற்படுத்தி நாட்டிலுள்ள போதைப் பொருள் விற்பனையை இல்லாதொழிக்க முடியாது. அமெரிக்காவிலும் சில மாகாணங்களில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. இருப்பினும், அந்த மாகாணங்களில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இருப்பினும், போதைப் பொருள் பாவனையை குறைவாக மதிப்பிட முடியாது. தான் போதைப் பொருள் பாவனைக்கு எதிரானவன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Sharing is caring!