தென்னிலங்கையில் புராதன கோட்டை

இலங்கையில் புராதன கோட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை தகவல் வெளியாகாத போர்த்துகீசிய கோட்டை ஒன்று, கேகாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தெஹிஓவிட்ட, பனாவல, மடகம்மன, பிரதேசத்தில் அமைந்து அடர்த்தியான காட்டுப் பகுதி ஒன்றில் இருந்தே இந்த கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த போர்த்துகீசிய கோட்டையானது ,1515 – 1540ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சீதாவக்கை படையெடுப்புக்குப் பின்னர் நீர்மாணிக்கப்பட்டிருக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

சப்ரகமுவ பகுதிக்கு இலகுவாக செல்லும் நோக்கில் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக அந்த கோட்டை 3 பக்கங்களை மறைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அனைத்து போர்த்துகீசிய கோட்டைகளும் பின்னர் ஒல்லாந்து மற்றும் ஆங்கிலேயரினால் பயன்படுத்தப்பட்டது.

எனவே அதனை போர்த்துகீசிய சின்னம் மாற்றப்பட்டது. எனினும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோட்டை அவ்வாறு பயன்படுத்தப்படவில்லை என நம்பப்படுகின்றது.

அங்கு எவ்வித போர்த்துகீசிய சின்னமும் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.

இந்த கோட்டை தொடர்பில் தகவல் பெறுவதற்காக அவ்விடத்திற்கு சென்ற தொல்பொருள் அதிகாரிகள், இதுவொரு வரலாற்று இடம் என அடையாளப்படுத்தும் அறிகுறிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கோட்டை தொடர்பில் வரலாற்றில் தகவல் உள்ள போதிலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அடர்த்தியான காட்டில் மறைந்திருந்த இந்த கோட்டை பிரதேச மக்களின் உதவியின் காரணமாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று பெறுமதியான இந்த கோட்டை பாதுகாப்பதற்கு விரைவில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்கள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

Sharing is caring!