தென்னை பயிர் செய்கை சபை தமது காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக கரந்தாய் மக்கள் குற்றச்சாட்டு

தென்னை பயிர் செய்கை சபை தமது பூர்வீகக் காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக கிளிநொச்சி – பச்சிளைப்பள்ளி, கரந்தாய் மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

கரந்தாய் பகுதியில் 1976 ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் காணி வீதம் 50 பேருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.

அன்று முதல் குறித்த காணியில் பயிர் செய்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து வந்த மக்கள், யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றனர்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டு மீண்டும் தமது காணிகளை நோக்கி வந்த போதிலும், தென்னை பயிர் செய்கை சபை காணிகளைக் கையப்படுத்தியிருந்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.

தம்மிடம் ஆவணங்கள் காணப்படும் நிலையில், பல தரப்பினரிடமும் இது தொடர்பில் முறையிட்ட போதிலும் இதுவரையில்
தீர்வு வழங்கப்படவில்லை என கரந்தாய் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

குறித்த காணி அரசாங்க தெங்கு பயிர் செய்கை சபைக்கு சொந்தமானது எனவும் இது தொடர்பான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்று வருவதாகவும் சிரேஷ்ட தென்னை அபிவிருத்தி அதிகாரி ஜே.சத்தியேந்திரன் கூறினார்.

Sharing is caring!