தெற்கு நெடுஞ்சாலை வருமானம் 30 மில்லியன் வரை அதிகரிப்பு

பாடசாலை விடுமுறைக் காலங்களில், தெற்கு அதிவேக வீதியின் வருமானம் 25 மில்லியன் ரூபா முதல் 30 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.

ஏனைய நாட்களில் தெற்கு அதிவேக வீதியின் மூலம் 22 மில்லியன் ரூபா வரை வருமானம் ஈட்டப்படுவதாக அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது முதல், தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில் நாளாந்தம் சுமார் 70,000 வாகனங்கள் பயணிக்கின்றன.

எனினும் தற்போது, 110,000க்கும் அதிக வாகனங்கள் பயணிப்பதாக எஸ். ஓப்பநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!