தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் (நிஸ்கோ) மாங்குளத்தில் வியாபார நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது

தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் (நிஸ்கோ) மாங்குளத்தில் வியாபார நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது.

உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தி இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இளைஞர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு, சுயதொழில் கடன்கள் மற்றும் சுயதொழில் பயிற்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது இதன் இலக்காகும்.
இதன் முதற்கட்டமாக வியாபார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி. சறோயா குகநேசதாசன் இதற்கு தலைமை தாங்கினார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Sharing is caring!