தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து விநாயகம் கைது
ஆறு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மெல்சிறிபுர பண்ணையிலுள்ள உணவகத்தை இரண்டு வருடங்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்காக சந்தேகநபரால் 12 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டார்.
பின்னர் இலஞ்சப் பணத்தை ஆறு இலட்சமாக குறைத்து அதனை இன்று பெற்றுக்கொள்ளும் போது தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சத்தைப் பெற்றுக்கொள்வதற்கு உதவி புரிந்த தனியார் நிறுவனமொன்றை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S