தேசிய பிரச்சினை …..இன்னும் தீர்வில்லை

நான்கரை வருடங்கள் ஆகியும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண யாழ். ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதியளித்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கு அந்த ஆட்சிக்காலத்தில் சிறந்த சந்தர்ப்பம் கிட்டியது. புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடவடிக்கையில் முக்கிய தலைவரான சட்டத்தரணி சுமந்திரன் முக்கிய பங்கு வகித்தார். எனினும், நான்கரை வருடங்களுக்கும் அதிகக் காலம் கழிந்துள்ள போதிலும் எதுவும் இடம்பெறவில்லை

என பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூறினார்.

Sharing is caring!