தேசிய ரீதியில் விலைச்சுட்டெண் அடிப்படையில் பணவீக்கம் 0.1 வீதத்தால் குறைவடைந்துள்ளது

தேசிய ரீதியில் விலைச்சுட்டெண் அடிப்படையில் பணவீக்கம் 0.1 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் மாதத்தில் பணவீக்கம் 0.1 வீதம் வரை குறைவடைந்துள்ளது.

ஒக்டோபர் மாதத்திற்கு முந்தைய 12 மாதங்களில் 0.9 வீதமாக இருந்த பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 0.1 வீதம் வரை குறைவடைந்துள்ளது.

உணவுப் பொருட்களின் செலவுப் பெறுமதி குறைந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மீன், முட்டை, தேங்காய், கிழங்கு, கருவாடு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய், கோதுமை மா போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதாகவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பணவீக்கம் குறைவடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Sharing is caring!