தேசிய விபத்து நிவாரண வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

தேசிய விபத்து நிவாரண வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப்பிரிவு இதனை பிரகடனப்படுத்தியுள்ளது. தேசிய விபத்து நிவாரண வாரத்தில் சுகாகார அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு பங்களிப்பு செய்யும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்பு இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் என்று இந்தப் பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் சமித்த சிறிதுங்க தெரிவித்தார். நாளாந்தம் 24 பேர் விபத்துக்களினால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விபத்துக்களின் காரணமாக வருடாந்தம் சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் மூவாயிரம் விபத்துக்கள் வாகன விபத்துக்களால் இடம்பெறுகின்றன. விபத்துக்கு உள்ளாவோரில் பெரும்பாலானோர் 15 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்று டொக்டர் சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.

Sharing is caring!