தேநீர் அல்லது உணவுப் பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை

சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தமைக்கு இணையாக, தேநீர் அல்லது உணவுப் பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

தேநீரின் விலையை 5 ரூபாவினால் அல்லது உணவுப் பக்கற்றொன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அசேல சம்பத் கூறியுள்ளார்.

12. 5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விலை குறைப்பிற்கு அமைய, 1,538 ரூபாவிற்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியும்.

வாழ்க்கைச் செலவு குழு கூடி எடுத்த தீர்மானத்திற்கு அமைய, சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டமைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!