தேர்தலில் முக்கிய பதவிக்கு போட்டியிட எல்லாத் தகுதியும் உள்ளது – குமார வெல்கம

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியின் சகல உறுப்பினர்களும் தனது பெயரைப் பிரேரித்துள்ளார்கள் எனின், ஏன் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தனக்கு வர முடியாது என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

தான் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக உள்ளேன். மஹிந்த ராஜபக்ஷவுக்காக களத்தில் இறங்கிய முதலாவது ஸ்ரீ ல.சு.கட்சிக்காரன். தனக்கு முக்கியமான தேர்தலில் முக்கிய பதவிக்கு போட்டியிட எல்லாத் தகுதியும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பதுளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Sharing is caring!