தேர்தலை சந்திக்க மகிந்தவின் சவால்

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்தினாலும் தம்மால் வெற்றி பெற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் தேர்தலைத் தள்ளிப் போட்டு வருவதே கவலைக்குரிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல், மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகி கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்து கொண்டவர்களை 16 பேர் கொண்ட குழு என அழைக்கத் தேவையில்லை. அவர்கள் எம்முடன் உள்ளனர் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!