தேவையான உர வகைகளைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை

பெரும்போக நெல் உற்பத்தி உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்குத் தேவையான உர வகைகளைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

இம்முறை பெரும்போகத்திற்கு யூரியா உள்ளிட்ட 1,50,000 தொன் உர வகைகள் தேவையாகவுள்ளன.

யூரியா 50 கிலோகிராம் மூடை 500 ரூபாவிற்கும் ஏனைய உர வகைகளின் 50 கிலோகிராம் மூடை 1,000 ரூபாவிற்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், உரத்திற்கான கேள்வி அதிகரித்து தட்டுப்பாடு நிலவலாம் என்பதால் அதனைத் தடையின்றி வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Sharing is caring!