தொடரும் சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை

மன்னார் – பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் ஆதரவற்றோருக்கு நிதி சேகரிப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி ஆதரவற்றோருக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகத் தெரிவித்து பெரிய பண்டிவிரிச்சான் பகுதிக்கு சிலர் சென்றுள்ளனர்.

அந்நபர்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச இளைஞர்கள் அவர்களை விசாரித்த போது, இருவர் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த குழுவில் இருந்த இருவர் மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன​ர்.

எனினும், இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்று தப்பிச்சென்ற ஏனைய இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring!