தொடரும் தமிழ் அர­சி­யல்க் கைதி­களை விடு­விக்க ஆர்ப்பாட்டங்கள்

நீண்­ட­கா­ல­மா­கச் சிறை­ க­ளில் அடைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல்க் கைதி­களை விடு­விக்கவேண் டும் என்று வலி­யு­றுத்­தி­யும், சிறைச்­சா­லை­க­ளில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டு­வ­ரும் அர­சி­யல் கைதி­க­ளுக்­குப் பலம் சேர்க்­கும் வகை­யி­லும் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­துக்கு முன்­பா­க­வும், அச்­சு­வேலிப் பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பா­க­வும் இன்று கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­துக்கு முன்­பாக பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளால் கவ­ன­வீர்ப்பு ஆர்ப்­பாட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இன்று காலை 11 மணிக்கு ஆரம்­ப­மா­கும் போராட்­டத்­தில் பேதங்­கள் இன்றி அனை­வ­ரும் கலந்து கொள்ளவேண்­டும் என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் அழைப்பு விடுத்­துள்­ளது.

அச்­சு­வே­லிப் பேருந்து நிலை­யம் முன்­பாக முற்­ப­கல் 10 மணிக்கு கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாவட்ட பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள் இந்­தப் போராட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளன.

அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லைக்­காக தமிழ் மக்­கள் அனை­வ­ரும் ஒன்­று­பட்டு போராட்­டத்­தில் கலந்து கொள்ள வேண்­டும் என்று அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

Sharing is caring!