தொடர்ந்தும் நிவாரணத்தை வழங்க தீர்மானம்

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக, வரட்சியான காலநிலையின் காரணமாக தொடர்ச்சியாக 3 போகங்களில் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல்போன விவசாய தொழிலாளர்கள் உள்ளடங்கலாக 4,51,224 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

Sharing is caring!