தொடர்ந்தும் பணி பகிஸ்கரிப்பில் சுங்க அதிகாரிகள்

சுங்க அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுகின்றது.

சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்ப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான பொதிசேவை மற்றும் ஏற்றுமதி சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளில் இருந்தும் சுங்க ஊழியர்கள் விலகியுள்ளனர்.

ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் கலாநிதி ஷமால் பெர்னாண்டோவை சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

இது தொடர்பில் , நிதி அமைச்சை தொடர்பு கொண்டு வினவியபோது, இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அங்குள்ள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!