தொண்­டர் ஆசி­ரி­யர் நிய­ம­னம்- 22ஆம் திகதி!!

வடக்கு மாகாணத் தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் 425 பேருக்கு எதிர்­வ­ரும் 22ஆம் திகதி நிய­ம­னம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தலைமை அமைச்­சர் செய­ல­கம் அறி­வித்­துள்­ள­தாக, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

வடக்கு மாகா­ணத் தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கப் பணி­பு­ரிந்­த­வர்­கள் கடந்த கால நிய­ம­னங்­க­ளின் போது அர­சி­யல் ரீதி­யா­கப் பழி­வாங்­கப்­பட்­ட­னர். தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு மீண்­டும் நேர்­மு­கத் தேர்வு நடை­பெற்­றது.

‘தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் 790பேருக்கு இரண்டு கட்­ட­மாக நேர்­மு­கத் தேர்வு நடை­பெற்­றது. இவர்­க­ளி­லி­ருந்து 425பேர் தெரிவு செய்­யப்­பட்­ட­னர். இவர்­க­ளுக்கு நிய­ம­னக் கடி­தங்­கள் எதிர்­வ­ரும் 22ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கத்­தி­னால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது’ என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.நேர்­மு­கத் தேர்­வுக்­குத் தோற்­றி­யோர் அனை­வ­ருக்­கும் நிய­ம­னம் வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்ற எமது கோரிக்­கையை தலைமை அமைச்­ச­ரி­டம் வலி­யு­றுத்­து­வோம் என்­றும் அவர் மேலும் தெரி­வித்­தார்.

Sharing is caring!