தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரயில் பயணங்கள் தாமதமடையலாம்

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரயில் பயணங்கள் தாமதமடையலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோட்டை ரயில் நிலையத்தில் முதலாம் மற்றும் மூன்றாம் மேடைகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக
ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால், குறித்த மேடைகளின் பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் குறித்த மேடைகளுக்கு வரும் ரயில்களை வேறு மேடைகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கம் காரணமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!